இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - டேன் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேன் லாரன்ஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து பென் டக்கெட்டுடன் இணைந்த ஜோ ரூட் அபாரமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 33 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 21 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரூட் - கஸ் அட்கின்சன் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில், ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News