SA20 League: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; எம்ஐ-க்கு எளிய இலக்கு!
தென் ஆப்பிரிக்கவின் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளது. இன்றைய போட்டிக்கான எம் ஐ அணிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காகிசோ ரபாடா இன்றைய போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான்மேன் மலான் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் இணை களமிறங்கியது. இதில் ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்களிலும், மாலன் 16 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 ரன்களிலும், கைல் வெர்ரெய்ன் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் வந்த லியுஸ் டு ப்ளூய் ஓரளவு தாக்குப்பிடித்து 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் டொனாவன் ஃபெரீரா, ரோமாரியோ செஃபெர்ட், அல்ஸாரி ஜோசப், கோட்ஸீ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
இறுதி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கார்டன் - ஃபாங்கிசோ இணை ஒருசில் பவுண்டரிகளை அடித்து ஆறுதளித்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்டவுன் அணி தரப்பில் ரஷித் கான், ஓடியன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.