SA vs ENG, 2nd ODI: பட்லர், ப்ரூக் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 343 டார்கெட்!

Updated: Sun, Jan 29 2023 17:54 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 73 ரன்களை பார்ட்னர்ஷிப் முணையிலும் அமைத்தனர். அதன்பின் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட ஹார் ப்ரூக் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் பட்லருடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 250    ரன்களைத் தாண்டியது. பின் 51 ரன்களில் மொயீன் அலியும், 14 ரன்களில் கிறிஸ் வோக்ஸும், 28 ரன்களிலும் சாம் காரணும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 சிக்சர், 8 பவுண்டரிகள் என 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்களைச் சேர்த்தது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே இரண்டு விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல், லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 343 ரன்கள் அடித்தால் தொடரைக் கைப்பற்றலாம் என்ற நோக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை