South Africa vs Pakistan 3rd T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடுவதுடன், ஒயிட்வாஷையும் தவிர்க்கும் முயற்சியில் களமிறங்கவுள்ளது. இதனால் இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

SA vs PAK 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
  • இடம்: வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம்: டிசம்பர் 14, இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs PAK 3rd T20I Live Streaming Details

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs PAK: Head-to-Head In T20Is

  • Total Matches: 24
  • South Africa: 12
  • Pakistan: 12
  • No Result: 0

SA vs PAK: Pitch Report

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 27 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 14 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 13 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 176 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 146 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 283 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

South Africa vs Pakistan Predicted XIs

பாகிஸ்தான் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆசம், சைம் அயூப், உஸ்மான் கான், தயாப் தாஹிர், இர்ஃபான் கான், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கெல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே/டேவிட் மில்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென்(கேப்டன்), டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, தயான் கலீம், நகாபயோம்ஸி பீட்டர், க்வேனா மபாகா, ஒட்னீல் பார்ட்மேன்

SA vs PAK Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென் , முகமது ரிஸ்வான்
  • Batters: டேவிட் மில்லர்(கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், பாபர் ஆசம், சைம் அயூப்
  • All-rounder: சைம் அயூப் (துணை கேப்டன்), ஜார்ஜ் லிண்டே
  • Bowlers: குவெனா மபாகா, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப்

SA vs PAK 3rd T20I Dream11 Prediction, Today Match SA vs PAK , SA vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Pakistan

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News