ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

Advertisement

பின்னர் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 100 ரன்களுடனும், ஷுப்மன் கில் 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விகெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக விரர் சாய் சுதர்ஷன் டக் அவுட்டானதுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளார். 

அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டானது இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்ஷனும் தற்சமயம் இடம்பிடித்துள்ளார். முன்னதக டெஸ்ட் அறிமுகத்தில் டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரே வித்தியாசம் என்னவெனில் சாய் 4 பந்துகளில் ஆட்டமிழந்தது மட்டுமே. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அறிமுக டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் (6 பந்துகளுக்கு குறைவாக)

  • ரவிச்சந்திரன் அஸ்வின் - 6 பந்துகள்
  • ஹனுமா விஹாரி - 6 பந்துகள்
  • ராகுல் சங்வி - 6 பந்துகள்
  • சாய் சுதர்ஷன் - 4 பந்துகள்
  • விஜய் பரத்வாஜ் - 4 பந்துகள்
  • சாய்ராஜ் பஹுதுலே - 3 பந்துகள்
  • ஜாம்ஷெட் இரானி - 3 பந்துகள்
  • விருத்திமான் சாஹா - 3 பந்துகள்
  • ஹர்பஜன் சிங் - 2 பந்துகள்
  • பிரவீன் குமார் - 2 பந்துகள்
  • உமேஷ் யாதவ் – 1 பந்து

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News