ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
  • இடம் - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • நேரம் - இரவும் 7.30 மணி

போட்டி முன்னொட்டம்

நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா அணி மோதிய முதல் போட்டியிலேயே 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதனால் இன்று நடைபெறும் போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆண்ட்ரே பிளட்சர், ரஹீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

அதேசமயம் முதல் போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய வஹாப் ரியாஸ், கேசரிக் வில்லியம்ஸ் ஆகியோருக்கு பதிலாக அல்சாரி ஜோசப் மற்றும் சமித் படேல் ஆகியோர் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரின்பாகோ நட்ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சிம்மன்ஸ், நரைன், காலின் முன்ரோ, டிம் செய்ஃபெர்ட், பொல்லார்ட் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக கருதப்படுகிறது. 

பந்துவீச்சில் இசுரு உதனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் ஜெய்டன் சீல்ஸ், அகில் ஹொசைன் ஆகியோர் தங்கள் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

Advertisement

மேலும் கடந்தாண்டு சிபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து நூழிலையில் கோப்பையை நழுவவிட்டுள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உத்தேச அணி

செயிண்ட் லூசியா கிங்ஸ்: ராகீம் கார்ன்வால், ஆண்ட்ரே பிளெட்சர், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மார்க் டீயல், ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட், சமித் பட்டேல், கீமோ பால், உஸ்மான் காதிர், ஓபேத் மெக்காய், அல்சாரி ஜோசப்.

Advertisement

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: லெண்ட்ல் சிம்மன்ஸ், சுனில் நரைன், காலின் முன்ரோ, டிம் செய்ஃபெர்ட், டேரன் பிராவோ, தினேஷ் ராம்டின், கீரன் பொல்லார்ட் (கே), இசுரு உதானா, அகில் ஹொசைன், ரவி ராம்பால், ஜெய்டன் சீல்ஸ்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரே பிளெட்சர், டிம் சீஃபர்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டிம் டேவிட், ஃபாஃப் டு பிளெசிஸ், காலின் முன்ரோ
  • ஆல் -ரவுண்டர்கள் - சமித் பட்டேல், இசுரு உதானா, சுனில் நரைன், கீரன் பொல்லார்ட்
  • பந்துவீச்சாளர்கள் - ஓபெட் மெக்காய், ஜெய்டன் சீல்ஸ்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News