AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து சாம் கொன்ஸ்டாஸ் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்கியதை அடுத்து, சாம் கொன்ஸ்டாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் அடுத்த போட்டியிலும் தேர்வு செய்யப்பட போவதில்லை என்பதால் ஷெஃபீல்ட் ஷீல்ட் முதல் தர போட்டிகளில் விளையாட கொன்ஸ்டாஸை அனுமதிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் சாம் கொன்ஸ்டான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சாம் கொன்ஸ்டாஸ் தனது முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.