இரானி கோப்பை 2024: இந்திய அணியில் சர்ஃப்ராஸ், ஜூரெல், யாஷ் தயாள் விடுவிடுப்பு!

Updated: Mon, Sep 30 2024 21:38 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்காக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், துருவ் ஜூரெல், பிரஷித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் ஆகியோரும் இடம்பிடித்துள்ளன. 

அதேசமயம் இந்த அணியில் இடம்பிடித்திருக்கும் துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத பட்சத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளெயிங் லெவனில் இடம்பிடிக்காத சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் சர்ஃப்ராஸ் கான் மும்பை ரஞ்சி அணிக்காக இப்போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.

Also Read: Funding To Save Test Cricket

மும்பை அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், சர்ஃப்ராஸ் கான்*, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர், சித்தன் அத்தாத்ராவ், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, முகமது ஜூனேத் கான், ராய்ஸ்டன் டயஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை