ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி ஹாரிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜார்ஜ் முன்ஸி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய பிரண்டன் மெக்முல்லன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

Advertisement

ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 8 ரன்களுக்கும், மேத்யூ கிராஸ் 7 ரன்களுக்கும், மைக்கேல் லீஸ்க் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் இந்த போட்டியிலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மார்க் வாட்டும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜேக் ஜார்விஸ் 3 ரன்களுக்கும், கிறிஸ்டோபர் சோல் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 18 ரன்களை எடுத்து மார்க் வாட்டும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 3 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News