உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்கன்ஸி 5 ரன்களிலும், மேத்யூ கிராஸ் 13 ரன்களிலும், பிராண்டன் மெக்முல்லன் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

ஆனால் அதேசமயம் தாமஸ் மெக்கிண்டோஷ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் பெர்ரிங்டனுடன் ஜோடி சேர்ந்த மைக்கேல் லீஸ்க் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்கள் சேர்த்த மைக்கேல் லீஸ்க் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கிரீவ்ஸ் 22 ரன்களிலும், ஜேக் ஜார்விஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் சதமடித்து அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் என 127 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய மார்க் வாட் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 44 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 282 ரன்களை குவித்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், அலி நேசர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில் கேப்டன் முகமது வசீம் மற்றும் பசில் ஹமீத் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களைக் கூட தாண்டவில்லை. அதிலும் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட அர்யான்ஸ் சர்மா, விருத்தியா அரவிந்த் ஆகியோர் ஒற்றையிலக்க ரன்களோடு கிறிஸ் சோல் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரொஹன் முஸ்தஃபா,ஆசிஃப் கான், அலி நேசர், அயான் கான், கார்த்திக் மெய்யப்பன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஐக்கிய அரபு அமீரக அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து தரப்பில் மார்க் வாட் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் சோல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தி ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.    

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News