ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.  

Advertisement

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார்.  அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளார். இதில் சுதர்ஷன் 759 ரன்களையும், விராட் கோலி 657 ரன்களையும் எடுத்துள்ளார். 

Advertisement

அணியின் மிடில் ஆர்டரில், லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸின் நிக்கோலஸ் பூரன், பஞ்சாப் கிங்ஸின் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரை சேர்த்துள்ளதுடன், அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளார். அதன்பின் அவர் தனது அணியில் மீதமுள்ள இடங்களுக்கு பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிருஷ்ணா, சென்னை சூப்பர் கிங்ஸின் நூர் அகமது, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸின் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் இம்பேக்ட் வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

வீரேந்திர சேவாக் தேர்வு செய்த ஐபிஎல் 2025 லெவன்: சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்), விராட் கோலி (ஆர்சிபி), நிக்கோலஸ் பூரன் (எல்எஸ்ஜி), ஸ்ரேயாஸ் ஐயர் (பஞ்சப் கிங்ஸ்), சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்), ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), ஜோஷ் ஹேசில்வுட் (ஆர்சிபி), பிரசித் கிருஷ்ணா (குஜராத் டைட்டன்ஸ்), நூர் அகமது (சிஎஸ்கே), ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்), குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்). இம்பேக்ட் வீரர் - ஜித்தேஷ் சர்மா (ஆர்சிபி)

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News