SEA vs SFMatch 16 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 5 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் நான்கிலும் தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இப்போட்டியிலாவது சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றியைப் பதிவுசெய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SEA vs SF: Match Details

  • மோதும் அணிகள்- சீயாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 26, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

SEA vs SF: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEA vs SF: Head-to-Head in MLC

  • Total Matches: 3
  • Seattle Orcas: 1
  • San Francisco Unicorns: 2
  • No Result: 0

SEA vs SF: Ground Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SEA vs SF: Possible XIs

Seattle Orcas: டேவிட் வார்னர், ஷயான் ஜஹாங்கீர், ஆரோன் ஜோன்ஸ், கைல் மேயர்ஸ், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, ஷிம்ரோன் ஹெட்மியர், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், கேமரூன் கேனன், ஜெரால்ட் கோட்ஸி

Advertisement

San Francisco Unicorns: டிம் சீஃபர்ட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மேத்யூ ஷார்ட் (கேப்டன்), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹசன் கான், கரிமா கோர், சேவியர் பார்ட்லெட், லியாம் பிளங்கெட், ஹாரிஸ் ரவுஃப், பிராடி கோச்

SEA vs SF: Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென், டிம் செஃபெர்ட்
  • Batters: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், டேவிட் வார்னர்
  • All-rounders: ஹசன் கான், மேத்யூ ஷார்ட் (captain), கைல் மேயர்ஸ் (vice captain), சிக்கந்தர் ரஸா, ரோமாரியோ ஷெஃபெர்ட்
  • Bowlers: ஹாரிஸ் ராவுஃப், சேவியர் பார்ட்லெட்

SEA vs SF Match 16 Dream11 Prediction, SEA vs SF Dream11 Prediction, Today Match SEA vs SF, SEA vs SF Prediction, SEA vs SF Dream11 Team, Fantasy Cricket Tips, SEA vs SF Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Seattle Orcas vs San Francisco Unicorns MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News