ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தன. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

அதேசமயம் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கிய 10ஆம் இடத்தையும், டேனியல் வையட் ஹாட்ஜ் ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 14ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேசமயம் சோஃபியா டங்க்லி 7 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தையும், டாமி பியூமண்ட் 19 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும், சோஃபி எக்லெஸ்டோன் 7 இடங்கள் முன்னேறி 69ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதல் இடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தையும், லாரன் பெல் ஒரு இடம் பின்தங்கி 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு பாகிஸ்தானின் நஷ்ரா சந்து, ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வெர்ஹாம் தலா ஒரு இடமும், இங்கிலாந்தின் சார்லீ டீன் 8 இடங்களும் முன்னேறி 7ஆவது இடத்தைப் பகிர்ந்துள்ளனர். அதேசமயம் இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ராதா யாதவ் 3 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி அறிமுக வீராங்கனை ஸ்ரீ சாரணி 49 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News