ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்கள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸும், வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணியும் என 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளன. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 8 இடங்களில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இதில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் நிடிக்கும் நிலையில், அடுத்தடுத்த இடங்களில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் உள்ளனர். 

Advertisement

அதேசமயம் இந்த பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் 2 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 2 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும், கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 11 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டையலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரீடி 3 இடங்கள் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த கேசவ் மஹாராஜ் 2 இடங்கள் பின் தங்கி 3ஆவது இடத்திற்கும், இந்திய அணியின் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

இந்த பட்டியலில் நமீபியா அணியைச் சேர்ந்த பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 5ஆம் இடத்திற்கும், ஜஸ்பிரித் பும்ரா 6ஆம் இடத்திற்கும், டிரெண்ட் போல்ட் 7ஆம் இடத்திற்கும் முகமது சிராஜ் 8ஆம் இடத்திற்கும் முன்னேற்றி அசத்தியுள்ளனர். இதுதவிர பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 14 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் குடகேஷ் மோட்டி ஒரு இடம் முன்னேறி 14ஆம் இடத்தை முகமது ஷமியுடன் பகிர்ந்துள்ளார். 

Advertisement

அதேசமயம் ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானின் முகமது நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அதேசமயம் ரஷித் கான் ஒரு இடம் முன்னேறி 3ஆம் இடத்தையும், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் 4 இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார். மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News