வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. 

Advertisement

இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப், “இத்தொடரில் நாங்கள் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஒரு தரமான எதிரணியை எதிர்கொண்டோம், ஆனால் ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை. நாங்கள் எப்போதும் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம். ஆனால் அணியின் பந்துவீச்சு முயற்சியைப் பாராட்ட வேண்டும். இன்று அதுவும் எங்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

மேலும் இது போன்ற நிலைமைகளில் பனியின் தாக்கம் மற்றும் காற்று போன்ற காரணிகளால் சேஸிங் செய்வது எப்போதும் சிறந்ததாக இருந்துள்ளது. ஆனால்  டாஸை வெல்வது என்னால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. பந்துவீச்சு பிரிவில் எங்களுக்கு ஓரளவு தெளிவு உள்ளது, நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அதனால் இந்த தோல்வியை மறந்துவிட்டு பாகிஸ்தான் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் டி20 போட்டிகள் அனைத்து ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதலும், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News