ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஷஷாங்க் சிங்!

Updated: Mon, Mar 17 2025 12:53 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தேர்வு செய்துளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் 2025 தொடரில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் ஜோடி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக இடம்பெறுவார்கள் என்றும், மூன்றாவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். 

அதன்பின் 4ஆம் வரிசையில் மார்கஸ் ஸ்டொய்னிஸும், ஐந்தாவது இடத்தில் கிளென் மேக்ஸ்வெல்லும், 6ஆம் இடத்தில் தானும் 7ஆம் இடத்தில் நெஹால் வதேராவும் விளையாடுவோம் என்றும் கூறியுள்ளார். இதுதவிர்த்து லெவனில் மேலும் ஒரு ஆல் ரவுண்டராக மார்கோ ஜான்சனை தேர்வு செய்துள்ள அவர் யுஸ்வேந்திர சஹால், ஹர்பிரீத் பிரார் மற்றும் அர்ஷ்தீப் சிங் அகியோரும் லெவனில் இடம்பெறுவார்கள் என்று தனது கணிப்பை வெளிப்பாடுத்தியுள்ளார். 

மேற்கொண்ட் நடப்பு ஐபிஎல் தொடர்ல் பஞ்சாப் கிங்ஸ் அணியானது சிறப்பாக உள்ளது என்றும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸைத் தவிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முமபி இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முன்னேறும் என்றும் கூறியுள்ளார். 

ஷஷாங்க் சிங் தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவன்: ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கோ யான்சன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Also Read: Funding To Save Test Cricket

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை