வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின்  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

இத்தொடர்களை முடித்த கையோடு வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளதாக இன்று அறிவிக்காப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கு முன்னதாக வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் ஷான் டைட் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக நியூசிலாந்தின் ஆண்ட்ரே ஆடம்ஸ் வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கி தற்போது ஷான் டைட் புதிய பயிற்சியாளராக செர்க்கப்பட்டுள்ளார். 

மேலும் ஷான் டைட் எதிர்வரும் 2027ஆம் நவம்பர் மாதம் வரை வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ளது. இதற்கு மத்தியில் ஷாட் டைட் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய ஷான் டைட், “வங்கதேச கிரிக்கெட் அணியுடன் ஈடுபட இது ஒரு நல்ல நேரம், நீங்கள் விரும்பினால் இது ஒரு புதிய சகாப்தமாக உருவாகும். மேலும் சமீபத்தில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து பல முறை பேசப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச கிரிக்கெட் அணியாகும். திறமை பலனைத் தரும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் வேகப்பந்து வீச்சுலும், அணிக்கு அதிக வெற்றிகளைப் பெறுவதில் தான் என்னுடைய கவனம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய அணிக்காக 2005 முதல் 2016ஆம் ஆண்டு வரை விளையாடிவுள்ள ஷான் டைட் 3 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது அதிவேக பந்துவீச்சுக்கு பேயர்போன இவர் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அங்கம் வகித்துள்ளார். மேற்கொண்டு பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளிலும் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News