தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!

Updated: Mon, Sep 23 2024 12:40 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் அவர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 21 போட்டிகளில் விளையாடியுள்ள டைட் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தனது அதிவேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன ஷான் டைட், தனது ஓய்வுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர், கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது ஆல் டைம் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். 

அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் நான்காம் இடத்திலும் இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார். 

மேற்கொண்டு இவரது அணியில் வெஸ்ட் இண்டீஸ் ஜம்பவான் பிரையன் லாரா, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார். மேலும் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, கிளென் மெக்ராத் ஆகியோரும் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் சோயப் மாலிக் ஆகியோருக்கும் ஷான் டைட் இந்த அணியில் இடமளித்தார். 

அதேசமயம் அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளராக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தேர்வு செய்த அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை 12ஆவது வீரராக அணியில் இணைத்துள்ளார். தேவைப்படும் நேரங்களில் தோனி மற்றும் முரளிதரவை பயன்படுத்தும் வகையில் ஷான் டைட் தனது அணியை உருவாக்கியுள்ளார். முன்னதாக இந்த அணியில் அவர் தோனியை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஷான் டைட் தேர்வு செய்த ஆல்டைம் லெவன் அணி: ஆடம் கில்கிறிஸ்ட், வீரேந்திர சேவாக், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, விராட் கோலி, ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயப் அக்தர், மகேந்திர சிங் தோனி/முத்தையா முரளிதரன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை