ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் கேப்டானாக 200க்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த 9ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், ஆடம் கில்கிறிஸ்ட், கேஎல் ராகுல் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

அதேசமயம் கேப்டனாக அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 424 பவுண்டரிகளுடன் முதலிடத்திலும், கௌதம் கம்பீர் 406 பவுண்டரிகளுடன் இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா 372 பவுண்டரிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது 300 பவுண்டரிகளையும் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News