2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Mar 13 2023 11:08 IST
Shubman Gill is in the Indian side for the long run, says Dinesh Karthik (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இது டிராவாகுமா? முடிவு வருமா என்பதை தீர்மாணிக்கும் முடிவு இந்தியாவுக்கு இருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறும். 

இதனிடையே இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் எந்த வீரரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும் என்று கூறியுள்ளார். கேஎல் ராகுலா ஷுப்மன் கில்லா என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை தான் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்வேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு அவர் டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். ஷுப்மன் கில் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடுவார்.

ஷுப்மன் கில் ஒரு வெற்றி குதிரை. அவர் மீது நீங்கள் தைரியமாக பணத்தை போடலாம்( நம்பிக்கை வைக்கலாம்) . என்னைக் கேட்டால் 2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும். அதுவரை அவருடைய இடத்தை அசைக்க முடியாது. கேஎல் ராகுல் தற்போது எப்படி உணர்வார் என்பது எனக்கு நன்றாக தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியை ராகுல் கண்டிப்பாக விரும்ப மாட்டார்.

ஏனென்றால் இது முற்றிலும் வித்தியாசமான சூழலாகும். ஆனால் கே எல் ராகுலை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என்ற யோசனை அனைவருக்கும் இருக்கும். கே எல் ராகுல் அப்படி விக்கெட் கீப்பிங் செய்ய முன்வந்தால் அது இந்தியாவுக்கு நிச்சயமாக நன்மையாக இருக்கும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள  ராகுல் தான் அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதனை செய்ய எப்போதும் தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடக்க வீரராக மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசையில் கூட விளையாட தயாராக இருக்கிறேன் என்றும் ராகுல் அண்மையில் கூறியிருந்தார். 

இதனால் ரிஷப் பந்த் இல்லாத நிலையில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தால் அது இந்திய அணிக்கு நிச்சயமாக சாதகமான விஷயமாக அமையும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் இந்தியா எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் விளையாடாமல் இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. ஒரு வேலை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் பிளேயிங் லெவனனில் யாரை சேர்க்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை