இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 06 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டி சில்வா - சமரவிக்ரமா இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

அதன்பின் 24 ரன்கள் எடுத்திருந்த போது தனஞ்செயா டி சில்வா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் 25 ரன்களை எடுத்திருந்த சதீரா சமரவிக்ரமா ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இருப்பினும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த வநிந்து ஹசரங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 32 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 67 ரன்களை எடுத்த நிலையில் ஹசரங்காவின் விக்கெட்டை நவீன் உல் ஹக் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்‌ஷனா, தசுன் ஷனகா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கு 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News