SL vs BAN, 1st T20I: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர் முகமது நைம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.  இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் எமான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய தாவ்ஹித்  ஹிரிடோயும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நைம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நைம் 32 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News