வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Fri, Jun 27 2025 23:09 IST
Image Source: Google

Sri Lanka ODI squad: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர்கள் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, குசால் மெண்டிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொழுபுவில் நடைபெற்று வருகிறறது. 

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மெஹிதி ஹசன் தலைமையிலான இந்த வங்கதேச அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முஷ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் டஸ்கின் அஹ்மத் ஆகியோருடன் டி20 அணியின் கேப்டன் லிட்டன் தாஸுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் நட்சத்திர வீரர்கள் குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய மிலன் ரத்நாயக்காவுக்கும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க*, தில்ஷன் மதுஷங்க, அசித்த ஃபெர்னாண்டோ, ஈஷான் மலிங்க.

Also Read: LIVE Cricket Score

வங்கதேச ஒருநாள் அணி: மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, ஹசன் மஹ்மூத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை