Advertisement

Sri Lanka vs Netherlands Match 38 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 38ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் நெதர்லாந்து அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம். இதனால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

SL vs NED: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நெதர்லாந்து
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - ஜூன் 16, காலை 6 மணி (இந்திய நேரப்படி)

SL vs NED Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் இங்கு பேட்டர்கள் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகிவை கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.

SL vs NED T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • இலங்கை - 03
  • நெதர்லாந்து - 00
Advertisement

SL vs NED: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Sri Lanka vs Netherlands Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்க (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரானா, நுவான் துஷார.

நெதர்லாந்து உத்தேச லெவன்: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜீத் சிங், சிப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ஆர்யன் தத், பால் வான் மீகெரன், விவியன் கிங்மா.

SL vs NED T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்ஸ்மேன் – பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க (கேப்டன்), பெஸ் டி லீடே (துணை கேப்டன்), லோகன் வான் பீக், சிப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தனஞ்சய் டி சில்வா.
  • பந்துவீச்சாளர்கள் – மத்திஷ பத்திரன, பால் வான் மீகெரென், நுவான் துஷார, ஆர்யன் தத்.
Advertisement

SL vs NED Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match SL vs NED, SL vs NED Dream11 Team, Fantasy  Cricket Tips, SL vs NED Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs Netherlands

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News