சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் முன்னேறின. 

Advertisement

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஒடிசா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறஙிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் கோஸ்வாமி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோஸ்வாமி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய மார்ட்டின் கப்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய பவன் நெகியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹாமில்டன் மஸகட்ஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பவன் நெகி 33 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஹாமில்டன் மஸகட்ஸா 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. கோனார்க் சூர்யாஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முனவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஒடிசா அணிக்கு ரிச்சர்ட் லிவி - தில்சன் முனவீரா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சர்ட் லிவி 16 ரன்களிலும், முனவீரா 11 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் இர்ஃபான் பதானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அவர்களைத் தொடர்ந்து அதிரடி வீரர்கள் கெவின் ஓ பிரைன் 17 ரன்களிலும், ஜெஸ்ஸி ரைடர் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஒடிசா அணி 78 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய யூசுப் பதான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யூசுப் பதான் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 85 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் ஒடிசா அணியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஹமித் ஹசன், அப்துர் ரஸாக், பவன் நெகி, சதுரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இப்போட்டியானது சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. அதன்பின் சூப்பர் ஓவரில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், கோப்பையையும் வென்று அசத்தியது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஹாமில்டன் மஸகட்ஸாவும், தொடர் நாயகன் விருதை மார்ட்டின் கப்திலும் தேர்வு செய்யப்பட்டனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News