AFG vs NZ: டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Tue, Aug 27 2024 09:20 IST
Image Source: Google

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷித் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆஃப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எந்தவொரு காரணமும் இதுவரை கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு ஹஸ்மதுல்லா ஷாஹித் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், ரியாஸ் ஹசன், நவீத் ஸத்ரான் உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த அணியில் ரஹ்மனலுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கே), இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலிகில், ஷாஹிதுல்லா கமால், குல்பதின் நைப், அஃப்ஸர் ஸஸாய், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஜியாவுர்ரஹ்மான் அக்பர், ஷம்சுர்ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், ஃபரித் அஹ்மத் மாலிக், நவீத் சத்ரான், கலீல் அஹ்மத், யமா அரப்.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை