இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும், மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்முலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் ராகுல் டிராவிட், இங்கிலாந்தின் ஜோரூட் ஆகியோருடன் 5ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்காரா மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 51 சதங்கள்
  • ஜாக் காலிஸ்- 45 சதங்கள்
  • ரிக்கி பாண்டிங் - 41 சதங்கள்
  • குமார் சங்கக்கார - 38 சதங்கள்
  • ஸ்டீவ் ஸ்மித், ராகுல் டிராவிட் & ஜோ ரூட் - 36 சதங்கள்

இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக  36 சதங்களை அடித்த இரண்டாவது வேகமான பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார், அவர் 206 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் முன்னாள் ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 200 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி  முதலிடத்தில் உள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதிவேகமாக 36 டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள்

  • 200 இன்னிங்ஸ்கள் - ரிக்கி பாண்டிங்
  • 206 இன்னிங்ஸ்கள் -ஸ்டீவன் ஸ்மித்*
  • 210 இன்னிங்ஸ்கள் -குமார் சங்கக்கார
  • 218 இன்னிங்ஸ்கள் -சச்சின் டெண்டுல்கர்
  • 239 இன்னிங்ஸ்கள் -ஜாக் காலிஸ்
  • 276 இன்னிங்ஸ்கள் -ஜோ ரூட்
  • 276 இன்னிங்ஸ்கள் - ராகுல் டிராவிட்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News