ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சூசகமாக கூறிவருகின்றனர். 

Advertisement

எனினும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, ஒரு வீரர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடும் போது ஒரு தொடரை வைத்தோ, இல்லை ஒரு சில மாதங்களை வைத்தோ முடிவு எடுக்க கூடாது என்று கூறி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ''ரோகித் சர்மா ரன் அடிக்காதபோது அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? இங்கே எல்லா வீரர்களும் ஒன்றுதான். ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் தரம், திறமை என்பது நிரந்தரமானது. 

நம்மிடம் நல்ல தேர்வுக் குழு உள்ளது. வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க போதுமான நேரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். வீரரின் ஃபார்மை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement

ஒரு நாள் போட்டித் தொடர் சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துணைபுரியும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே, ஒருநாள் ஆட்டத்திலும் செட்டில் ஆக போதுமான நேரம் கிடைக்கும்.  

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் நிலைமைக்கு ஏற்ப விளையாட முடியும். எனவே விராட் கோலி தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்ப இந்த ஒருநாள் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்” என்று கருத்து தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News