ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Jun 01 2025 13:54 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

அதன்படி இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். முன்னதாக கடந்த 2016அம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. 

ஆனால் தற்சமயம் சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 67 என்ற சராசரி மற்றும் 167 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 673 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் கடந்த் 2018ஆம் ஆண்டு 684 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர்

  • ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)
  • ரிஷப் பந்த் - 684 ரன்கள் (2018)
  • சூர்யகுமார் யாதவ் - 673 ரன்கள் (2025)
  • கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)

PBKS vs MI Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Mumbai Indians XI : ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர் - அஷ்வினி குமார்
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை