நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து - விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே ரன்கள் ஏதுமின்றி விக்கட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவியும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் சமாரி அத்தபத்து 23 ரன்களுக்கும், கவிஷா தில்ஹாரி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மானுடி நாணயக்கார - நிலாக்‌ஷி டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மானுடி நாணயக்கார 35 ரன்களில் ஆட்டமிழக்க, நிலாக்‌ஷி டி சில்வாவும் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் பிரீ இல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் - ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா பிலிம்மர் 4 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய எம்மா மெக்லெட் 11 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸ் 47 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ப்ரூக் ஹாலிடே மற்றும் இஸி ஷார்ப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ப்ரூக் ஹாலிடே 46 ரன்களையும், இஸி ஷார்ப் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அனியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து மகளிர் அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News