டி20 உலகக்கோப்பை தொடரின் 6ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம் - ஓமன் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது நைம் - ஷாகிப் அல் ஹசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த முகமது நைம் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து 64 ரன்களை விளாசிய முகமது நைம் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நூருல் ஹசன், அஃபிஃப் ஹொசைன் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஓமன் அணி தரப்பில் ஃபையாஸ் பட், பிலால் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.