அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பாப்புவா நியூ கினி - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பிஎன்ஜி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பிஎன்ஜி அணிக்கு கேப்டன் அசாத் வாலா - டோனி உரா இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் அசாத் வாலா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செசே பாவ் 5 ரன்களுக்கும், டோனி உரா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய லெகா சியகா - ஹிரி ஹிரி இணை ஓரளவு தக்குப்பிடித்து விளையாடியாது. ஆனாலும் சியகா 12 ரன்களுக்கும், ஹிரிஹிரி 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சார்லஸ் அமினி 5 ரன்களுக்கும், சாத் சோப்பர் 4 ரன்களிலும் என வந்த வேகத்திலேயே பெவியனுக்குத் திரும்பினார். 

Advertisement

பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிப்லின் டொரிகா 12 ரன்களுக்கும், அலெய் நாவ் 5 ரன்களிலும், நார்மன் வனுவா 5 ரன்களிலும் என அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உகாண்டா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்பெஷ் ரம்ஜானி, காஸ்மஸ் கியூட்டா, ஜுமா மியாகி, ஃபிராங்க் நசுபுகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஜர் முகாசா, ராபின்சன் ஒபுயா மற்றும் சிமன் செசாஸி ஆகியோர் தலா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய அல்பெஷ் ரம்ஜானி 8 ரன்களுக்கும், தினேஷ் நக்ரானி ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் உகாண்டா அணி 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த ரியாஸத் அலி ஷா - ஜுமா மியாகி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜூமா மியாகி தந்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 33 ரன்களைச் சேர்த்திருந்த அலி ஷாவும் ஆட்டமிழந்தார். இருப்பினும் உகாண்டா அணியானது 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News