T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Thu, Jun 27 2024 07:11 IST
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா - இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஆறு ஓவர்களிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதீன் நைப் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் தனது முதல் ஓவரை வீசிய காசிசோ ரபாடா முதல் பந்திலேயே இப்ராஹிம் ஸத்ரானை களீன் போல்டாக்கியதுடன், அந்த ஓவரின் நான்காவது பந்தில் அனுபவ வீரர் முகமது நபியின் விக்கெட்டையும் க்ளீன் போல்ட்டின் மூலம் கைப்பற்றி மிரட்டினார். 

இதனால் ஸ்தம்பித்து நின்ற ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்த அதிர்ச்சியாக நங்கெயலியா கரோட்டேவும் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 28 ரன்களை மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜே வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 28 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் கேப்டன் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனாத் இணை விளையாடியது. ஓரளவு தாக்குப்பிடித்த இருவரும் தலா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய நூர் அஹத், நவீன் உல் ஹக் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளியெ இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை