விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். சூர்யகுமார் யாதவ் எதிர்பார்க்கப்பட்டபடியே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா. ஸ்பின்னர்களாக அஸ்வின், ராகுல் சாஹர், அக்ஸர் படேல் ஆகியோருடன் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியும் எடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். கடைசியாக 2017ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஆடிய மூத்த வீரர் அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் எடுக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான அணியில் சீனியர் ஸ்பின்னர் அஸ்வின் தேவை என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் இல்லை.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முதல் டி20 உலக கோப்பையை வென்றவருமான மகேந்திர சிங் தோனி, டி20 கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவும் என்பதால் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

Advertisement

ரிசர்வ் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News