ரோஹித் சர்மா அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ராகுல் டிராவிட்!

Updated: Fri, Jun 28 2024 21:47 IST
Image Source: Google

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளையுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் நடைபெறவுள்ளது. 

இதில் தென் ஆப்பிரிக்க அணியானது வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணியும் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் குறித்து ஒருசில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவைப் பற்றி தற்போது நான் என்ன சொன்னாலும் அது குறையாகிவிடும்.

அவர் அணியுடன் பணியாற்றும் விதம், அவரது உத்தி, அவரது முதிர்ச்சி, அவருக்கு அணியின் வீரர்களிடம் இருந்து கிடைக்கும் பதில், அவரது திட்டமிடல், அவரது கலன்ந்துரையாடல், அணி வீரர்களும் செலவிடும் நேரம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் அவரைப் பற்றி என்னால் அதிக பேச முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி குறித்து பேசிய டிராவிட், “விராட் கோலியைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் விஷயம் என்னவென்றால், நீங்கள் சற்று அதிக ரிஸ்க் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடும்போது, அதில் சில சமயங்களில் எடுபடாமல் போகலாம். கடந்த போட்டியில் கூட அவர் அதிரடியாக விளையாட முயற்சித்து அற்புதமான சிக்ஸரை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அதே ஓவரில் விக்கெட்டையும் இழந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இருப்பினும் அவரது அனுகுமுறைக்கான நோக்கத்தை நான் விரும்புகிறேன், அவர் அதைச் செய்யும் விதத்தை நான் விரும்புகிறேன். அவர் அதைனை சரியாக செய்துவிட்டால், அது மற்ற வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். உங்களுக்குத் தெரியும், சில காரணங்களுக்காக, நான் அதை ஜின்க்ஸ் செய்ய விரும்பவில்லை, ஆனால் பெரிய ஒன்று வரப்போகிறது என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை