ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Mon, Apr 29 2024 11:51 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேன் வில்லியம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டிரெண்ட் போல்ட், டிம் சௌதீ, லோக்கி ஃபர்குசன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, மார்க் சப்மேன் போன்ற வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி.

ரீஸர்வ் வீரர்கள்: பென் சியர்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை