முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!

Updated: Mon, May 20 2024 22:02 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற இருந்த மூன்றாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஸ்போர்ட்பார்க் வெஸ்ட்வெலட் மைதானத்தில்நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக இப்போட்டியானது தாமதமானது. அதன்பின்  தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் டாஸ் கூட வீசப்படாமல் போட்டியானது முழுவதுமாக கவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதன்மூலம் முத்தரப்பு டி20 தொடரின் புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து அணியானது ஒரு வெற்றி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அதேசமயம் நெதர்லாந்து அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

மேலும் இத்தொடரில்  ஸ்காட்லாந்து அணியானது ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது.  இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை