வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நடைபெற்றது தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாத்மான் இஸ்லாம் அரைசதம் கடந்த நிலையில், 64 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய் வீரர்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 36 ரன்களையும், ஷஹாத் ஹொசைன் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 39 ரன்களையும், கேசி கார்டி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் வங்க்தேச அணி முதல் இன்னிங்ஸில் 18 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணியில் சாத்மான் இஸ்லாம் 46 ரன்களிலும், கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய ஜக்கார் அலி அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 91 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வங்க்தேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் மற்றும் கீமார் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 43 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 55 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 185 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News