ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

Advertisement

அனால் இப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிர்பார்த்த தொட்க்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஆர்யா தேசாய் 5 ரன்னிலும், உமாங் குமார் 2 ரன்னிலும், சௌரவ் சௌகான் ரன்கள் ஏதுமின்றியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் உர்வில் படேல் 26 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விஷால் ஜெய்ஸ்வால் - ஹெமங்க் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளியாடிய ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்னில் நடையைக் கட்ட, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெம்ங்க் படேல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. தமிழ்நாடு அணி தரப்பில் ச்ந்தீப் வாரீயர், குர்ஜப்நீத் சிங் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய் தமிழ்நாடு அணியிலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் எதிரணி பந்துவிச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்படி அணியின் நட்சத்திர வீரர்கள் ஜெகதீசன் 4 ரன்னிலும், பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் பாபா இந்திரஜித் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ரித்திக் ஈஸ்வரன் 22 ரன்களிலும், கேப்டன் ஷாருக் கான் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்னிலும், சாய் கிஷோர் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவ்ரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் தமிழ்நாடு அணியானது 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாக்வாஸ்வல்லா 4 விக்கெட்டுகளையும், சிந்தன் கஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் குஜராத் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News