மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது. 

Advertisement

ஏனெனில் ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில் 26 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 22 வெற்றிகளை குவித்த நிலியில், ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8இல் வெற்றி, 6இல் தோல்வி, 1 போட்டி டிரா என ஆண்டை நிறைவு செய்துள்ளது.

Advertisement

இதனையடுத்து எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதன் மூலம், அடுத்த ஆண்டு அட்டவணையை தொடங்குகிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, அடுத்ததாக பிப்ரவரி மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

அதன்பிறகு இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதுடன், வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.  அதன்பின் அக்டோபரில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி, அதன்பின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி, ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதன்மூலம் இந்திய அணி எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் 18 டி20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி போட்டி அட்டவணை

Advertisement

ஜனவரி-பிப்ரவரி: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்

  • முதல் டி20 சர்வதேசம்: 22 ஜனவரி 2025, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • 2வது டி20 சர்வதேசம்: 25 ஜனவரி 2025, எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
  • 3வது டி20 சர்வதேசம்: 28 ஜனவரி 2025, சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட்
  • 4வது டி20 சர்வதேசம்: 31 ஜனவரி 2025, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
  • 5வது டி20 சர்வதேசம்: 2 பிப்ரவரி 2025, வான்கடே ஸ்டேடியம், மும்பை

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6, 2025, விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், நாக்பூர்
  • 2வது ஒருநாள் போட்டி: 9 பிப்ரவரி 2025, பாராபதி ஸ்டேடியம், கட்டாக்
  • 3வது ஒருநாள் போட்டி: 12 ஜனவரி 2025, நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்

பிப்ரவரி-மார்ச்: சாம்பியன்ஸ் கோப்பை

  • பிப்ரவரி 20- இந்தியா vs பங்களாதேஷ் - துபாய்
  • பிப்ரவரி 23- இந்தியா vs பாகிஸ்தான் - துபாய்
  • மார்ச் 2 - இந்தியா vs நியூசிலாந்து - துபாய்
  • மார்ச் 4 - சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி - துபாய் (தகுதி பெற்றால்)
  • மார்ச் 9 - சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி - துபாய் (தகுதி பெற்றால்)
Advertisement

ஜூன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதி: 11-15 ஜூன் 2025 – லார்ட்ஸ் (தகுதி பெற்றால்)

ஜூன்-ஆகஸ்ட்:  இங்கிலாந்து vs இந்தியா

  • முதல் டெஸ்ட்: ஜூன் 20-24 , ஹெடிங்லி, லீட்ஸ்
  • இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2-6, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
  • மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10-14, லார்ட்ஸ், லண்டன்
  • நான்காவது டெஸ்ட்: ஜூலை 23-27 , மான்செஸ்டர்
  • ஐந்தாவது டெஸ்ட்: 31 ஜூலை-4 ஆகஸ்ட், ஓவல்

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அட்டவணை உறுதிசெய்யப்படாத தொடர்கள்

  • ஆகஸ்ட் 2025 – வங்கதேசம் vs இந்தியா 3 ஒருநாள், 3 டி20
  • அக்டோபர் 2025 – வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா - இரண்டு டெஸ்ட் போட்டிகள்
  • அக்டோபர் 2025 – ஆசிய கோப்பை டி20 தொடர்
  • அக்டோபர்-நவம்பர் 2025 - ஆஸ்திரேலியா vs இந்தியா - 3 ஒருநாள், 5 டி20கள் (வெளிநாட்டில்)
  • நவம்பர் - டிசம்பர் 2025: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - (2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News