காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!

Updated: Thu, Oct 05 2023 17:11 IST
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீல நிற ஜெர்சி தான் ஞாபகத்துக்கு வரும். இந்திய அணியின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தை விவரிக்கும் போது பிலீட் ப்ளூ(Bleed Blue) என்று தான் கூறுவார்கள். அப்படி நீல நிறம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணி என்பது எழுதப்படாத விதி. இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அணிந்து வருகிறது.

இந்த நிலையில் இதனை மாற்றும் முயற்சியில் தற்போது பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்திய அணி ஜெர்சியில் காவி நிறத்தை புகுத்தி அதனை டிசைனாக மாற்றினார்கள். இதேபோன்று 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஜெர்சி முதல்முறையாக மாற்றப்பட்டது. அது ஹோம் மற்றும் அவே என இரு ஜெர்சிகள் பயன்படுத்தப்பட்டது. இதில் அவே ஜெர்சிகள் இந்திய அணிக்கு காவி நிறமும் நீல நிறமும் கலந்த வகையில் வடிவம் மாற்றப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் எந்தவித வரவேற்பும் ஏற்படவில்லை. இதனை அடுத்து தற்போது ஐசிசி உலக கோப்பை 2023 ஆம் ஆண்டுக்கான தொடரில் வீரர்கள் பயிற்சி செய்வதற்காக நீல நிறத்தில் ஒரு ஜெர்சி பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதனை திடீரென்று தற்போது முழுமையாக காவி நிறத்திற்கு பிசிசிஐ மாற்றி இருக்கிறது. இந்த புதிய காவி ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று பயிற்சி செய்வதற்காக சென்னை வந்தனர். 

 

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீலம் நிறம் தானே. அதை இப்படி காவி நிறத்துக்கு மாற்றி விட்டார்களே என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். எனினும் இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்று பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. மேலும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இதே போன்ற ஜெர்சியை தான் இந்திய வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை