தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் குறித்து ஏன் யாரும் சிந்திக்கவில்லை - ஆகாஷ் சோப்ரா!

Updated: Tue, Nov 12 2024 10:59 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். முன்னதாக தனிப்பட்ட கரணங்களால் இத்தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு ரோஹித் சர்மா விலகும் தகவலையில் செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதிசெய்தார்.

இதுகுறித்து பேசிய அவர்,”ஆஸ்திரேலிய தொடரில் ஏதெனும் ஒரு போட்டியில் ரோஹித் சர்மா விலகுவார் என்பது குறித்து ​​எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். ஆனால் அவர் தொடர் முழுவது விளையாடுவார் என்று நம்புகிறோம். இருப்பினும் இந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல் உள்ளிட்டோரும் இப்பதால், ரோஹித் சர்மாவின் இடத்தை அவர்கள் நிச்சயம் நிரப்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் அணியின் தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் பெயரை ஏன் யாரும் சிந்திக்கவில்லை என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “இந்த நேரத்தில், ரோஹித் சர்மாவின் இருப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன், அது குறித்து ஊடகங்களுக்குத் தெரியவந்தால் அறிவிப்பேன் என்றும் கம்பீர் கூறினார்.

இருப்பினும், ரோஹித் சர்ம இல்லை என்றாலும், ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இருப்பார். மேலும் ஏற்கெனவே அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் இருக்கும் மற்றொரு பெரிய கேள்வி என்னவெனில், அணியின் தொடக்க வீரர் யார் என்பது தான். அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரும் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்று கம்பீர் கூறியிருந்தார்.

ஆனால் இது அவர்கள் ஷுப்மான் கில் பற்றி சிந்திக்கவில்லை என்று கூறுகிறது. நீங்கள் ஷுப்மான் கில் உடன் தொடங்க முயற்சி செய்யலாம் என்று நான் யோசனை செய்தேன், ஆனால் அவர் செய்வதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும், அதனால் ஏன் அவரைத் தொட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். கேஎல் ராகுல் பற்றி பேசிய அவர், மிகச் சில வீரர்களுக்கே இருக்கும் பன்முகத் திறன் அவரிடம் உள்ளது என்று கூறினார். 

Also Read: Funding To Save Test Cricket

மேலும் அவரால் தனது பேட்டிங் வரிசையை மாற்றி களமிறங்க முடியும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். எனக்கும் கேஎல் ராகுலின் ஆட்டம் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் பொறுமையாக இருப்பது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அங்கு தொடக்க வீரராக விளையாடுவது எளிமையாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை