TEX vs SFMatch 7 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிராஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இரு வலிமையான அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

TEX vs SF: Match Details

  • மோதும் அணிகள்- டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சான் ஃபிராஸிஸ்கோ யூனிகார்ன்ஸ்
  • இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
  • நேரம் - ஜூன் 20, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

TEX vs SF : Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

TEX vs SF: Head-to-Head

  • Total Matches: 3
  • Texas Super Kings: 2
  • San Francisco Unicorns: 1
  • No Result: 0

TEX vs SF: Ground Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகபட்சமாக 269 ரன்களும், குறைந்த பட்சமாக 60 ர்னகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 165-170ஆக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

TEX vs SF: Possible XIs

Texas Super Kings: டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), சைதேஜா முக்கமல்ல, டேரில் மிட்செல், டொனோவன் ஃபெரீரா, ஷுபம் ரஞ்சனே, கால்வின் சாவேஜ், ஸ்டீபன் விங், ஆடம் மில்னே, நூர் அகமது, ஜியா-உல்-ஹக்

Advertisement

San Francisco Unicorns: டிம் சீஃபர்ட், ஃபின் ஆலன், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, கூப்பர் கனொலி, ஹசன் கான், கோரி ஆண்டர்சன் (கேப்டன்), ஜுவானாய் டிரைஸ்டேல், சேவியர் பார்ட்லெட், ஹாரிஸ் ரவுஃப், கார்மி லெ ரூக்ஸ்

TEX vs SF: Dream11 Team

  • Wicket-keepers: டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன் (கேப்டன்), டெவான் கான்வே
  • Batters: ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்,
  • All-rounders: டேரில் மிட்செல் (துணை கேப்டன்), கூப்பர் கனொலி, ஹசன் கான்
  • Bowlers: நூர் அஹ்மத், ஆடம் மில்னே, ஹாரிஸ் ராவுஃப் 

TEX vs SF Match 7 Dream11 Prediction, TEX vs SF Dream11 Prediction, Today Match TEX vs SF, TEX vs SF Prediction, TEX vs SF Dream11 Team, Fantasy Cricket Tips, TEX vs SF Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Texas Super Kings vs San Francisco Unicorns MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News