ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ருத்ர தாண்டவமாடிவர் பிரித்வி ஷா. அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்து இந்தியாவின் எதிர்கால சேவாக் என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு மிகவும் மோசமான காலமாக இருந்து வருகிறது. ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கிய பிரித்வி ஷா அதன் பின்னர் உடல் எடை அதிகம் எனக்கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.

Advertisement

அனைத்து சவால்களையும் மீறி ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தது. எனினும் ப்ளேயிங் 11இல் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது மீண்டும் கெட்ட காலம் அவரை சூழ்ந்துள்ளது. சமீபத்தில் பிரபல இன்ஸ்டாகிராம் புகழ் சப்னா கில்லுக்கும் பிரித்விக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.

Advertisement

தன்னை ஹாக்கி பேட்டால் தாக்க வந்ததாக சப்னா கில் மீது பிரித்வி ஷா காவல்துறையில் புகார் கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்வி தான் மதுபோதையில் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டதாக சப்னா கில் வழக்கு போட்டார். இதுகுறித்த வழக்கே இன்னும் நிலுவையில் உள்ள சூழலில்  பிரித்வி ஷாவுக்கு காதலிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், “சில பேர் உங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக காதலிக்கிறேன் (லவ் யூ) என்று கூறி உடன் இருப்பார்கள். அவர்களுக்கான தேவைகள் முடிந்த பிறகு, இனி நம்மால் எந்த பயனுமில்லை எனத்தெரிந்தவுடன் விட்டு சென்றுவிடுவார்கள்” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.

பிரித்வி ஷாவும், நிதி தபாடியா என்ற நடிகையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளிவரும். தற்போது ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் பிரிந்திருப்பதாக தெரிகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News