ராகுல்  டிராவிட்டின் கீழ் விளையாடுவது மற்றிலும் மாறுபட்டது -பிரித்வி ஷா

Updated: Tue, Jul 06 2021 13:32 IST
‘There’s a different kind of enjoyment playing under Rahul sir’: Prithvi Shaw (Image Source: Google)

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு பேட்டிங் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வழிநடத்த உள்ளார். 

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது குறித்த நினைவலைகளை இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரித்வி ஷா“ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது மாறுபட்ட அனுபவமாக இருக்கும். அது ஒருவிதமான மகிழ்ச்சியை வழங்கும். அண்டர் 19 அணிக்கு அவர்தான் எங்களது பயிற்சியாளர். அவரது பேச்சு தொடங்கி கிரிக்கெட் அனுபவங்களை பகிர்வது வரையில் அது ஒரு தனி சுகம். 

அவருக்கு கிரிக்கெட் குறித்து அனைத்தும் தெரியும். சூழலுக்கு ஏற்ப எப்படி நம்மை தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டுமென்ற நுணுக்கங்களையும் அவர் சொல்வார். அது வேற லெவலாக இருக்கும். ராகுல் சார் எங்களுடன் இருப்பதால் வீரர்களின் டிரஸ்சிங் ரூமில் ஒரு ஒழுக்கம் இருக்கும். 

அவரது பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் எனக்கான இடத்தை நிரந்தரமாக பிடிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை