Tilak Varma County Debut: எசெக்ஸ் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தனது முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. செல்ம்ஸ்ஃபோர்டு கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எசெக்ஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக சார்லி அலிசன் சதமடித்ததுடன் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 101 ரன்களையும், மேத்யூ கிரிட்ச்லி 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 71 ரன்களையும் சேர்த்தனர். ஹாம்ஷையர் அணியில் கைல் அபோட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹாமஷையர் அணியில் அலெஸ்டர் ஓர் மற்றும் நிக் கபின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய அறிமுக வீரர் திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இப்போட்டியில் இக்கட்டான கட்டத்தில் களமிறங்கிய அவர் சதமடித்தும் அசத்தினர். அதன்பின் இந்த இன்னிங்ஸில் 241 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 100 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய லியாம் டௌசனும் சதமடிக்க ஹாம்ஷையர் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. தற்போது அந்த அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிர்கு 400 ரன்களை எடுத்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மா சதமடித்ததன் மூலம் சிறப்பு சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அதன்படி கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு, அஜிங்க்யா ரஹானே, பியூஷ் சாவ்லா மற்றும் முரளி விஜய் ஆகியோர் மட்டுமே கவுண்டி தொடரில் தங்களுடைய அறிமுகமாக போட்டியிலேயே சதத்தை பதிவுசெய்தனர்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதில் பியூஸ் சாவ்லா 2013 சோமர்செட் அணிக்காக விளையாடி மிடில்செக்ஸுக்கு எதிராக 112 ரன்களை எடுத்தார். அதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு எசெக்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் சதமடித்து அசத்தி இருந்தார். இதுதவிர்த்து ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடிய அஜிங்கியா ரஹானே நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News