Trinbago Knight Riders vs Antigua and Barbuda Falcons, Match 20 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

TKR vs ABF: Match Details

  • மோதும் அணிகள்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்
  • இடம் - குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட்
  • நேரம் - செப்டம்பர் 20, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

TKR vs ABF: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

TKR vs ABF: Head-to-Head

  • Total Matches: 01
  • TKR: 00
  • ABF: 01
  • No Result: 00

TKR vs ABF: Pitch Report

Advertisement

நடப்பாண்டு சிபிஎல் கிரிக்கெட் தொடரில் டிரினிடாட்டில் நடைபெறும் இரண்டாவது லீக் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் இதுவரை 9 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 4 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 115 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 112 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Trinbago Knight Riders vs Antigua and Barbuda Falcons Possible XIs

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், சுனில் நரைன், ஷேக்கரே பாரிஸ், நிக்கோலஸ் பூரன், கீசி கார்டி, கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரீஸ் கவுஸ், அகேல் ஹொசைன், ஜெய்டன் சீல்ஸ், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், வக்கார் சலாம்கெயில்

Advertisement

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: ஃபகார் ஜமான், டெடி பிஷப், கோஃபி ஜேம்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், கிறிஸ் கிரீன்(கே), ரோஷன் ப்ரிமஸ், ஷமர் ஸ்பிரிங்கர், முகமது அமீர்

TKR vs ABF: Dream11 Team

விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், சாம் பில்லிங்ஸ்
பேட்டர்: ஷேக்கரே பாரிஸ், ஜேசன் ராய், ஃபகர் சமான்
ஆல்ரவுண்டர்கள்:இமாத் வசிம், கிறிஸ் கிரீன், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல்
பந்துவீச்சாளர்கள்: ஷமர் ஸ்பிரிங்கர், வக்கார் சலாம்கெயில், 

Advertisement

TKR vs ABF Match 12 Dream11 Prediction, Today Match TKR vs ABF, TKR vs ABF Dream11 Team, Fantasy Cricket Tips, TKR vs ABF Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News