டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
Advertisement
அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணியில் ஸ்ரீநிவாசன், உமாசங்கர் சுசில், அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் - கேப்டன் ஃபெராரியோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 47 ரன்களையும், முருகன் அஸ்வின் 20 ரன்களையும் சேர்த்தனர்.