டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் - ஷிவம் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ராகுல் 20 ரன்களிலும் ஷிவம் சிங் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித், பூபதி குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஆதித்யா கனேஷ் - சரத் குமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 25 ரன்களில் சரத்குமார் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஆதித்யா கனேஷ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  அதன்பின் வந்த சுபோத் பாடி அதிரடியாக விளையாடி 31 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் ஓவர்கள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் ராஹில் ஷா 3 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோஹித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணிக்கு சந்தோஷ் ஷிவ் - கேப்டன் ஜெகதீசன் தொடக்கம் கொடுத்தனர். இதில் சந்தோஷ் ஷிவ் ஒரு ரன்னிலும், பிரதோஷ் பால் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - பாபா அபரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஜெகதீசன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம்  அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபரஜித் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய சஞ்சய் யாதவ், ஹரிஸ் குமார், சசிதேவ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 7 சிக்சர், 2 பவுண்டரி என 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இறுதியில் கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ராமலிங்கம், லோகேஷ் ராஜ், ரஹில் ஷா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகலை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், சரவண குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News