தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று கோவையில் நடைபெற்ற 6அவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆசிக் மற்றும் கேப்டன் அபாரஜித் இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஆசிக் அரைசதம் கடந்து அசத்த, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 41 ரன்களில் அபாரஜித்தும், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களில் ஆசிக்கும் தனது விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் ஸ்வப்நில் சிங் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அணியை வலுவான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் ஷங்கர் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களைக் குவித்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் யுதீஷ்வரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் ஒருபக்கம் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய சந்தோஷ் குமார் 10 ரன்களுக்கும், என் எஸ் ஹரிஷ் 14 ரன்களுக்கும், அஜிதேஷ் குருஸ்வாமி ஒரு ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 12 ரன்னிலும், நிர்மல் குமார் 3 ரன்களிலும், சோனு யாதவ் 15 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அருண் கார்த்திக் அரைசதம் கடந்தார். 

பின்னர் 51 ரன்கள் எடுத்த் நிலையில் அருண் கார்த்திக் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் முகமது அதான் கான் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி  

Also Read: LIVE Cricket Score

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News